×

கோத்தகிரியில் கனமழை பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் கனமழை பெய்தது.கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே காலநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டு குளிர்ந்த காலநிலை நிலவி வந்தது.இந்நிலையில் பிற்பகல் வேலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, பாண்டியன் பார்க்,அரவேனு, கைக்காட்டி, ஒரசோலை,கேர்க்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் காலநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த காலநிலை நிலவியது.

தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்ததால் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் குளிர் காலநிலையில் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பெய்து வரும் மழையானது மலை காய்கறிகள் பயிர்களுக்கு ஏற்றார் போல் அமையும் என்பதால் மலைக்காய்கறிகள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக காலநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டு பகல் நேரங்களில் சாலைகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.இதனால் சாலையில் பயணம் மேற்கொண்ட வாகன ஓட்டிகள் பகல் நேரங்களில் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் தெரிந்து கொள்ள முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகள் எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கினர்.

The post கோத்தகிரியில் கனமழை பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Gothakiri ,Gothagiri ,Awadi ,Kotakiri ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்